ஜெர்மனியில் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான செயல்
ஜெர்மனியில் தந்தை ஒருவர் தனது 3 வயது குழந்தையை கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளார்.
ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள டீஸ்லான் நகரத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த 40 வயதுடைய தந்தை தனது 3 வயதான பெண் குழந்தையை நில அறையில் 3 நாட்களாக அடைத்து வைத்திருந்துள்ளார்.
இவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட நிலையில் சிறுமியானவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த தந்தை ரையில் கெனல் கனால் என்ற ஆற்றில் இறந்த குழந்தையை கல்லால் கற்றி வீசியுள்ளார்.
40 வயதுடைய தந்தையானவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று இறந்த மகளை தான் ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் தற்பொழுது பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். பொலிஸார் குறித்த சிறுமியின் உடலை தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனைர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





