இலங்கை

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடுகள் – இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் முதலிடத்தை பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலை Henley Passport Index வௌியிட்டுள்ளது.

குறித்த பட்டியலில் இலங்கை 96 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன.

பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் பிடித்து பட்டியலில் பின்தங்கியுள்ளன.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகள் அல்லது இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் இந்த பட்டியலை Henley Passport Index தயாரித்து வருகிறது.

இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டில் இருந்து 80 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது. பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் பிடித்து பட்டியலில் பின்தங்கியுள்ளன.

இலங்கையின் அண்டை நாடுகளான மாலைத்தீவு 58 ஆவது இடத்திலும் சீனா 62 ஆவது இடத்திலும் பூட்டான் 87 ஆவது இடத்திலும் மியன்மார் 92 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 97 ஆவது இடத்திலும், நேபாளம் 98 ஆவது இடத்திலும் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுச்சீட்டு மூலம் எத்தனை நாடுகள் அல்லது இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்ற அடிப்படையில் இந்த பட்டியலை Henley Passport Index தயாரித்து வருகிறது.

உதாரணமாக, இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நாடுகளின் கடவுச்சீட்டினை வைத்திருப்பவர்கள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டு கடவுச்சீட்டு மூலமாக 28 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

 

 

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்