கருத்து & பகுப்பாய்வு செய்தி

நீருக்கடியில் மூழ்கும் உலகின் பெருநகரங்கள்!

உலகெங்கிலும் உள்ள நகரங்கள்  275 ஆண்டுகளில் நீருக்கடியில் மூழ்கும் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

பாரிஸில் (Paris)  உள்ள சோர்போன் பல்கலைக்கழக (Sorbonne University) விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளனர்.

ஆய்வாளர்களின் கணிப்பு படி 2300 ஆம் ஆண்டளவில் அண்டார்டிகாவின் பனி 59 சதவீதம் வரை உருகுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நடந்தால் கடல் மட்டம் 10 மீற்றர் வரை உயரும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில், ஹல் (Hull), கிளாஸ்கோ (Glasgow) மற்றும் பிரிஸ்டல் (Bristol)ஆகியவை நீரில் மூழ்கும், அதே நேரத்தில் அமெரிக்காவில், ஹூஸ்டன் (Houston), நியூ ஓர்லியன்ஸ் (New Orleans) ஆகியவையும் நீரில் மூழ்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மியாமியில் (Miami)வசிக்கும் மக்கள் உள்நாட்டிற்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் தொடர்ந்து உயர்ந்தால் இந்த செயன்முறைக்கான வேகம் அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!