உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று எடுத்த விபரீத முடிவு

உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று உயிரை மாய்த்துக் கொண்டதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையின் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியில் இருந்த அரசு ஊழியர் ரோபோ உயிரை மாய்த்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோபோ பணிபுரிந்த கட்டிடத்தின் படிக்கட்டுகளில் ரோபோவின் உடல் கிடந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள் ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நகர சபையின் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியை ரோபோட் செய்ததாகவும், நகரவாசிகள் இந்த விபத்தை உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறுவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 15 times, 1 visits today)