அட்லாண்டிக் நீரோட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உலகிற்கு ஏற்பட்டுள்ள அவசரநிலை!

அட்லாண்டிக் நீரோட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உலகளாவிய அவசரநிலையை தோற்றுவித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழு, 2100 க்குப் பிறகு அட்லாண்டிக் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் (AMOC) சரிந்து போகக்கூடும் என்று கண்டறிந்துள்ளது.
குறிப்பாக கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் அதிகமாக இருந்தால் இதன் வேகம் அதிகரிக்கும் என கண்டுப்பிடித்துள்ளது.
AMOC என்பது வெப்பமண்டலத்திலிருந்து வடக்கு அட்லாண்டிக்கிற்கு வெதுவெதுப்பான நீரை நகர்த்தும் ஒரு மாபெரும் கடல் கன்வேயர் பெல்ட் போன்றது.
வளைகுடா நீரோடை முக்கிய பங்கு வகிக்கிறது, அந்த வெதுவெதுப்பான நீரை அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வழியாக வடக்கே கொண்டு செல்லும் முக்கிய நீரோட்டமாக செயல்படுகிறது.
இது வடமேற்கு ஐரோப்பா மற்றும் வடகிழக்கு அமெரிக்கா போன்ற இடங்களை குளிர்காலத்தில் மிதமானதாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் வெப்பமண்டல மழை உட்பட உலகளாவிய வானிலை முறைகளை பாதிக்கிறது.
இந்நிலையில் இவ் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றமானது புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை தோற்றுவிக்கக்கூடும்.