பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு வீடு அமைக்கும் பணி நாளை ஆரம்பம்!
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகின்றது.
ரீ பில்டிங் ஸ்ரீலங்கா ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும்.
இதற்கமைய டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறும்.
அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய மற்றும் சிறிமாபுர ஆகிய பகுதிகளில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி , ரிதீகம மற்றும் தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





