மிக நீலமாக தாடியை கொண்ட பெண் கின்னஸ் சாதனை
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் 38 வயதான எரின் ஹனிகட் என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிக நீளமான தாடி என்ற பெருமையுடன் அவர் இந்த சாதனையை படைந்துள்ளார். அந்த பெண்ணின் தாடியின் நீளம் 30 செ.மீ ஆகும்.
எரின் ஹனிகட் தனது 13வது வயதில் தாடி வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் அந்த நேரத்தில், அவள் ஒரு நாளைக்கு மூன்று முறை ரேசர் பிளேடால் ஷேவிங் செய்திருக்கிறாள்.
ஆனால் சிறிது நாளில் அதை நிறுத்திய அவர், மிக நீளமான தாடி கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட எரின் ஹனிகட்டின் தாடி உண்மையில் இப்படித்தான் வளர்கிறது.
பெண்களின் ஹார்மோன்கள் சமநிலையின்றி தேவையற்ற முடி வளர்ச்சி ஏற்படும். இளமையில் தலையை மொட்டையடித்தவர், பின்னர் அதை கைவிட்டாள்.
சுமார் 4000 பேரின் பதிவுகளின் தரவுகளை உள்ளடக்கிய கின்னஸ் உலக சாதனையின் படி, எரின் ஹனிகட்டுக்கு முன், 75 வயதான விவியன் வீலர் உலகின் மிக நீளமான பெண் தாடிக்கு உரிமை கோரியுள்ளார்.
அவரது தாடியின் நீலம் 25.5 செ.மீ ஆகும்.