வெள்ளையாக இருந்து திடீரென கருப்பாக மாறிய பெண் : அரிதான ஹார்மோன் கோளாறால் ஏற்பட்ட பாதிப்பு!
அரிதான ஹார்மோன் கோளாறு மற்றும் இன்னும் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் தனது தோல் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறியது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
சப்ரினா கோம்ஸ் என்ற 24 வயதுடைய யுவதி ஒருவர் தனது 15 ஆவது வயதில் தைமோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனின் (ACTH) அதிகப்படியான உற்பத்தி மற்றும் சுவாச பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக, உடலில் கார்டிசோல் ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்ய தூண்டுகிறது.
உடலில் அதிக அளவு கார்டிசோலை நீண்ட காலமாக வெளிப்படுத்துவதால் ஏற்படும் குஷிங்ஸ் சிண்ட்ரோம், எடை அதிகரிப்பு, தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் வட்டமான முகம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஆனால் 2022 இல் கார்டிசோலை உற்பத்தி செய்யும் அட்ரீனல் சுரப்பிகளை அகற்றுவதற்கான ஒரு செயல்முறைக்குப் பிறகு, சப்ரினா, தனது தோல் நிறம் கருமையாக இருப்பதைக் கவனித்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த அறுவை சிகிச்சை என் தோலை கருமையாக்கியது, பின்னர் கட்டியானது ACTH ஹார்மோனை அதிகமாக உருவாக்குகிறது, இது என் நிறத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கட்டி பெரிதாகும் போது நான் கருமையாகி வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.
சப்ரினாவின் அட்ரீனல் சுரப்பிகளை அகற்றியதால், அவளது உடலில் கார்டிசோல் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், கட்டியானது ACTH-ன் அதிகப்படியான உற்பத்தியைத் தொடர்ந்து தூண்டுகிறது என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.