இலங்கை

கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது!

அனுராதபுரம் – யாழ்ப்பாண சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் அனுராதபுரத்தில் பிரபலமான வைத்தியர் ஒருவரிடம் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 07 கருத்தடை மாத்திரைகளை 35 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த பெண் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், நீதவான் அவரை எச்சரித்து 50 ஆயிரம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்