ஜெர்மனியில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்
ஜெர்மனியில் பணப் பரிவர்த்தை நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 8.2 மில்லியன் யூரோக்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கியிலிருந்து விமான மூலம் திரும்பி வந்து குறித்த பெண் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். 31 வயதான பெண் ஒருவர் தனது வழக்கறிஞர் மூலம் திரும்பப் போவதாக அறிவித்தார்.
செவ்வாய்கிழமை காலை பிறேமென் விமான நிலையத்திற்கு வந்தவுடன் உடனடியாக பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண் பணப் பரிமாற்ற நிறுவனத்தில் பணத்தைப் பொதி செய்து பாதுகாப்பாக அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
குறித்த பெண் மே 21, 2021 அன்று பணம் நிரப்பப்பட்ட பல பைகளைத் திருடினார் எனக் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார்.
(Visited 10 times, 1 visits today)





