உலகம்

நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பளினி … வீடியோ வைரலானதில் மன்னிப்பு கோரினார்(வீடியோ)

நேரலை செய்தி ஒளிபரப்பின்போது, BBC நிறுவனத்தின் பெண் செய்தியாளர் விளையாட்டாய் நடுவிரல் காட்டியதில் சர்ச்சைக்கு ஆளானார். அந்த வீடியோ வைரலானதில், பின்னர் அது குறித்து விளக்கமும் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

சர்வதேசளவில் பிரபல ஊடகமான BBC தொலைக்காட்சியில் புதன் அன்று செய்தி ஒளிபரப்பின்போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பிபிசியின் தலைமை தொகுப்பாளராக இருக்கும் மரியம் மோஷிரி என்பவர், நண்பகல் செய்திகளை வழங்கத் தயாராக இருந்தபோது, நேயர்கள் அதிர்ச்சியடையும் வகையில் ​​தனது விரலைக் காட்டினார்.

ஆபாச செய்கையாக வர்ணிக்கப்படும் இதனை நேரலையில் ஒரு செய்தி வாசிப்பாளர் அடையாளம் காட்டியது, பிற்பாடு வீடியோ துணுக்காக சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சைக்கு வித்திட்டது. வழக்கமான BBC கவுன்ட் டவுன் 10-லிருந்து பூஜ்ஜியத்தை தொட்டதும், திரையில் செய்தி வாசிப்பாளர் மோஷிரி தோன்றுகிறார். அந்த கணம் அவர் தனது தலையை சாய்த்து, கண்கள் விரித்து, குறும்பு புன்னகையுடன் நடுவிரல் காட்டுவது தோன்றுகிறது. அனுபவமிக்க அந்த செய்தியாளர் உடனே சுதாரித்து, செய்திகள் வாசிப்பதை தொடர்கிறார்.

https://twitter.com/i/status/1732550830190944279

சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவை முன்வைத்து பலரும் பலவிதமான விவாதங்களை எழுப்பினர். வழக்கமான சாடல்களுக்கு அப்பால் சிலர், செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் பணியிட விரக்தி குறித்து குசலம் விசாரித்தார்கள். சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில் பெண் செய்தியாளர் மோஷிரி தனது ட்விட்டர் கணக்கு வாயிலாக பின்னர் விளக்கமும் அளித்தார். அதில் மன்னிப்பையும் கோரியிருந்தார்.

“அனைவருக்கும் வணக்கம். நான் கேலரியில் இருந்த டீமுடன் கொஞ்சம் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தேன். இயக்குனர் 10லிருந்து 0 வரை கவுன்ட் டவுன் எண்ணிக்கொண்டிருந்தபோது, அவருக்கு இணையாக நானும் எண்ணுவது போல் விரல்களை ஒவ்வொன்றாக மடித்து நடித்துக்கொண்டிருந்தேன். அப்படி 1-க்கு வந்தபோது நான் நகைச்சுவையாக விரலைச் சுழற்றினேன். இது கேமராவில் பிடிபடும் என்பதை உணரவில்லை. இது தனிப்பட்ட எங்கள் குழுவுடன் மேற்கொண்ட நகைச்சுவை மட்டுமே. அது ஒளிபரப்பில் சேர்ந்ததுதற்கு மிகவும் வருந்துகிறேன். இதனால் எவரேனும் புண்பட்டிருப்பின் என்னை மன்னிக்கவும்” என்று மோஷிரி விளக்கம் அளித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்