சீனாவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பெண் : நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

சீனாவில் 1990 களில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திய யுவி என்ற பெண் ஒருவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு விசாரணையில் 17 குழந்தைகளை அவர் விற்பனை செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து மறு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் மேற்படி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மறுவிசாரணையின்போது நீதிமன்றமும் யுவிற்கான அனைத்து அரசியல் உரிமைகளையும் பறித்தது மற்றும் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
(Visited 13 times, 1 visits today)