பிரபல ஹாலிவுட் நடிகரை வீடு புகுந்து தாக்கிய பெண்!
பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் மலிபூவில் உள்ள அவரது வீட்டில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணால் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளார்.
டூ அன்ட் அ ஹால்ஃப் மென் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் சார்லி ஷீன், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் 47 வயதான பக்கத்து வீட்டுப் பெண் சார்லியின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். நடிகர் சார்லி ஷீன் கதவைத் திறந்ததும் அவரது சட்டையைக் கிழித்து அவரது கழுத்தை நெறித்துள்ளார்.அவரைத் தாக்கி விட்டு பின் தனது வீட்டிற்கே சென்றுவிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சிறிய காயங்களுடன் நடிகர் சார்லி ஷீன் தப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சார்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தபின் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)




