தாயை குணமாக்க வந்து மகளை தீட்டுப்படுத்திய சூனிய வைத்தியர்
தனது தாயின் நோய்களை பேய் சக்தியால் குணப்படுத்துவதாகக் கூறி தனது மைனர் மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சூனிய வைத்தியருக்கு 60 வருட கடூழிய சிறைத்தண்டனையை 20 வருடங்களில் அனுபவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்ல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு 38 வயதுடைய இந்த குற்றவாளி, குறித்த சிறுமியை பல சந்தர்ப்பங்களில் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
அந்த அதிகார சபையின் அறிவிப்பின் பேரில், சட்டமா அதிபர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார், மேலும் அவர் 3 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த சூனிய வைத்தியர் ஆலயம் நடத்தி அசுர பலத்துடன் நோய்களை குணப்படுத்துவதாகவும் ஹொரண பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண்ணும் அங்கு சிகிச்சை பெற வந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டில் தாற்காலிக ஆலயம் அமைக்க வேண்டும் எனக் கூறிய குற்றவாளி, அதற்கமைவாக அந்த வீட்டுக்குச் சென்று சிறுமியை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.