போர் விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் நம்பிக்கை!
ஈரான்மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உட்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
ஹார்முஸ் நீரினை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு,
“ ஈரான் Iran அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும்.
போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். ஈரானிடம் கடற்படை இல்லை, தகவல் தொடர்பு இல்லை, விமானப்படை இல்லை. ஏவுகணைகள் சிதறடிக்கப்பட்டுள்ளன.” – என ட்ரம்ப் Trump மேலும் கூறினார்.




