ரஷ்யாவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து வெடித்த எரிமலை : விமான சேவைகள் பாதிப்பு!

ரஷ்யாவின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்று வெடித்து, வளிமண்டலத்தில் பாரிய சாம்பலை உமிழ்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிமலையில் இருந்து வெளியாகும் சாம்பல் புகைமூட்டம் வானளந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து புறப்பட தயாரான விமானங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ளூர் நேரப்படி இன்று (18.07) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது.
இதனைத் தொடர்ந்து சுறுசுறுப்பான எரிமலையான கம்சட்கா எரிமலை வெடித்துள்ளது. இதன்காரணமாக விமானங்களுக்கு “சிவப்பு” குறியீடு எச்சரிக்கை, மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை வழங்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)