திடீரென அதிகரித்த டொலரின் பெறுமதி!
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு பிறகு முதல் முறையாக இலங்கை நாணயத்திற்கு எதிரான டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, டொலர் ஒன்றின் பெறுமதி 310 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306 ரூபா 28 சதமாகவும், விற்பனை விலை 313 ரூபா 81 சதமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





