சீனாவின் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடும் அமெரிக்கா : எதிர்க்கும் மஸ்க்!
ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் EVகள் மீதான வரிகளை நான்கு மடங்காக உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, சீன மின்சார வாகனங்கள் (EV கள்) மீதான அமெரிக்க கட்டணங்களை தான் எதிர்ப்பதாக டெஸ்லா முதலாளி எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பரிமாற்ற சுதந்திரத்தை தடுக்கும் அல்லது சந்தையை சிதைக்கும் விஷயங்கள் நல்லதல்ல எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா சீனாவில் சந்தையில் எந்த கட்டணங்களும் மற்றும் எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் நன்றாக போட்டியிடுகிறது. நான் கட்டணங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த கட்டண உயர்வை எதிர்ப்பதாகவும், பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் சீனா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.