மற்றுமொரு போரை முடிவுக்கு கொண்டு வரத் தயாராகும் அமெரிக்க ஜனாதிபதி
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலுக்கு விரைவான தீர்வைக் கொண்டு வருவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மற்றொரு போரின் முடிவைக் குறிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தான் அரசாங்க பிரதிநிதிகள் குழுவிற்கும் தலிபான் அரசாங்க பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் எல்லையில் மீண்டும் அதிகரித்தன. அமைதிப் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்கள் முழுமையாக நிற்கவில்லை.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல்கள் தொடங்கியுள்ளதாக நான் கேள்விப்பட்டேன். நான் அதை மிக விரைவாக தீர்ப்பேன் என அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தாய்லாந்து-கம்போடியா அமைதி ஒப்பந்தத்தில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





