ஆஸ்திரேலியா மீது வரி விதிப்பை அமுல்படுத்துமாறு ட்ரம்பிடம் கோரிக்கை!

ஆஸ்திரேலியா மீது வரி விதிப்பை அமுற்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் அமெரிக்க மருத்துவ நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க மருந்துத் துறை பிரதிநிதி அமைப்பிலிருந்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீருக்கு அனுப்பப்பட்ட ஒரு நீண்ட கடிதத்தில், PBS அமெரிக்க கண்டுபிடிப்புகளை குறைத்து மதிப்பிடும் “சேதப்படுத்தும் விலை நிர்ணயக் கொள்கைகளுக்கு” சமம் என்றும், விற்பனையில் பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறியது.
PBS இன் கீழ், ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான விலையை வழங்குவதற்காக அரசாங்கம் சப்ளையர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதற்கிடையில் அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் போட்டியாளர்கள் மீதான வரிகளுக்கான வரைபடத்தை டிரம்ப் வெளியிடவுள்ளார்.
இதில் ஆஸ்திரேலியாவின் GST போன்ற விற்பனை வரிகளுக்கு உட்பட சில திட்டங்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.