திடீரென வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி!
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் கால் சதவீத புள்ளியை உயர்த்தியுள்ளது.
கடந்த 14 மாதங்களில் அது 10 ஆவது உயர்வாக கருதப்படுகின்றது. விலைவாசியை நிலைப்படுத்த மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 16 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்த்தியுள்ளது.
தற்போதைக்கு அந்த நடவடிக்கையே இறுதியாக இருக்கும் மத்திய வங்கி கோடி காட்டியிருந்தது. வட்டி விகிதத்தின் உயர்வால் சொத்து, முதலீடு ஆகியவற்றுக்கான தேவை குறைவதைக் காணமுடிவதாக அதிகாரிகள் கூறினர்.
பணவீக்கம் இன்னும் அதிகமாக இருப்பதாக மத்திய வங்கித் தலைவர் Jerome Powell கூறினார். பணவீக்கம் மீதான தாக்கத்தைக் காணச் சிறிதுகாலம் எடுக்கலாம் என்று கூறப்பட்டது.
வட்டி விகிதம் இவ்வாண்டு குறைக்கப்படும் சாத்தியம் அவ்வளவாக இல்லை என்று Powell குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் பல்லாண்டுகள் காணாத அளவில் சென்ற ஆண்டு விலைவாசி வேகமாக உயரத் தொடங்கியது.
அந்நாட்டு மத்திய வங்கி அவ்வப்போது வட்டி விகிதத்தை உயர்த்தியது. பிரித்தானியா, ஐரோப்பா நாடுகளின் மத்திய வங்கிகளும் அதே நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன.