கனடாவில் இராணுவ செலவீனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள அமெரிக்கா!
கனடாவின் தற்போதைய இராணுவச் செலவுத் திட்டங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அந்நாட்டு அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என அமெரிக்க செனட்டர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ புள்ளிவிவரங்களின்படி, கனடா 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.33% இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் செலவழிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது நேட்டோ நாடுகள் தங்களுக்கு நிர்ணயித்த இலக்கான 2% ஐ விட குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2032ஆம் ஆண்டுக்குள் கூட்டணியின் இலக்கை கனடா சந்திக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.





