தைவானுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா : கண்டனம் வெளியிட்டுள்ள சீனா!
தைவான் தேர்தல் குறித்த அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா கடுமையாகக் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்கின் இராஜதந்திர அழுத்தம் மற்றும் சீன போர் விமானங்களின் தினசரி ஊடுருவல்களுக்கு மத்தியில் தைவான் தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த தேர்தலில் ஹூ யு-இஹ்வை 900,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து லாய் வெற்றிப்பெற்றார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை லாயின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, “தங்கள் வலுவான ஜனநாயக அமைப்பு மற்றும் தேர்தல் செயல்முறையின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்காக” தைவான் மக்களைப் பாராட்டியது.
இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க அறிக்கை “தைவான் சுதந்திரம்” பிரிவினைவாத சக்திகளுக்கு மிகவும் தவறான சமிக்ஞையை அனுப்புகிறது” என்றார்.
“நாங்கள் இதை கடுமையாக கண்டிக்கிறோம் மற்றும் உறுதியாக எதிர்க்கிறோம், மேலும் அமெரிக்க தரப்பில் தீவிர பிரதிநிதித்துவங்களை செய்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.