கியேவுக்கு 300 மில்லியன் டொலர் இராணுவ உதவி தொகுப்புகளை அறிவித்த அமெரிக்கா!
கியேவுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ ஆதரவுப் பொதியை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த பொதியில், பீரங்கி குண்டுகள், ஹோவிட்சர்கள், ராக்கெட்டுகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி “ரஷ்யாவின் மிருகத்தனமான, தூண்டப்படாத மற்றும் நியாயமற்ற போரை எதிர்கொண்டு தைரியமாக தன்னைத் தற்காத்துக் கொள்ள உக்ரைன் தொடர்ந்து உதவும்” என்று வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுடன் எவ்வளவு காலம் எடுக்குமோ அதுவரை பயணிக்கும் என்றும் அவர் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)