அமெரிக்காவின் – லாஸ் ஏஞ்சல்ஸ் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட குறைப்பாடு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (LAX) புறப்படும்போது யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் அதன் சக்கரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு சம்பவம் கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளது.
போயிங் 757 சம்பந்தப்பட்ட இந்த சமீபத்திய சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை, மேலும் சக்கரம் மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தின் பழுதுபார்க்கும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், விமானத்தில் பயணித்த யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





