இங்கிலாந்தின் நிகர இடம்பெயர்வில் ஏற்பட்ட வீழ்ச்சி : எதிர்காலத்தில் பிரித்தானியாவிற்கு இடம்பெயர முடியுமா?
இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் 2023 இல் நிகர இடம்பெயர்வு 10% குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
டிசம்பர் 2023 வரையிலான ஆண்டில், இங்கிலாந்திற்கு வந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள வித்தியாசம் 685,000 என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) கூறுகிறது.
இது 764,000 இலிருந்து ஏற்பட்டுள்ள சரிவை குறிக்கிறது. ஆரம்ப மதிப்பீட்டில் இருந்து 19,000 ஆல் மேல்நோக்கி திருத்தப்பட்ட இந்த ஆண்டுக்கான முழுமையான தரவு இப்போது வெளியாகியுள்ளது.
இதேவேளை நிகர இடம்பெயர்வு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உள்ளது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இடம்பெயர்வு ஆய்வகம் கூறியுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன.
கன்சர்வேட்டிவ் கட்சிகள் தங்களின் முந்தைய தேர்தல் அறிக்கையில் புலம் பெயர்தலை கட்டுப்படுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளனர். 2019 இல் இருந்த விகிதத்துடன் ஒப்பிடும்போது தற்போது குறைந்துள்ளதாகவே காணப்படுகிறது.
உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஒரு அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் நிகர இடம்பெயர்வு வீழ்ச்சி மற்றும் விசா விண்ணப்பங்கள் இதுவரை 25% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது சுனக்கின் சுனக்கின் திட்டம் செயல்படுவதைக் காட்டுகிறது. 2023 இல் இங்கிலாந்துக்கு வர தகுதியுடைய 300,000 பேர் இனி எதிர்காலத்தில் வருவார்களா என்பது சந்தேகம்தான்.