உலகம் செய்தி

அமெரிக்காவை சென்றடைந்தார் உக்ரேனிய ஜனாதிபதி

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவின் நியூயார்க் வந்தடைந்தார்.

ரஷ்யப் போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவைக் கேட்க உக்ரைன் அதிபர் இந்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுவார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் 06 துணை ஜனாதிபதிகள், 04 பிரதிப் பிரதமர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் உட்பட 140 அரச தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டு பொதுச்சபை அமர்வில் தங்கள் அரசின் சார்பில் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பங்கேற்கின்றனர்.

இதனிடையே, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, வரும் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்திக்க உள்ளார்.

ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டின் சீனாவிற்கு விஜயம் செய்யும் பின்னணியில் உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கிறார்.

இதன்போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!