ஜெர்மனியில் பொலிஸாரின் உண்மை முகம் அம்பலம்
ஜெர்மனியில் போதை பொருள் விடயத்தில் தொடர்பு உள்ளதாக பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பேர்லினில் 45 வயதுடைய பொலிஸ் உயர் அதிகாரியான பெண் ஒருவர் தனது அதிகாரியுடன் ஒன்றாக சேர்ந்து போதை பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து போதை பொருளை கைப்பற்றியுள்ளார்.
இதன் பின்னர் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை தனது அலுவலகத்துக்கு கொண்டு வருமாறு சக பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆணையிட்டதாகவும்,
இதேவேளையில் அவர்கள் ஆணையிட்ட பொழுது போதை பொருட்களை பெண் அதிகாரியிடம் ஒப்படைத்ததாகவும்,
இந்நிலையில் பெண் பொலிஸானவர் தனது பாவணைக்காக இந்த போதை பொருட்களை எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதாவது 4320 கிராம் இடையுடைய இந்த போதை பொருட்களை இவர் ஒரு இடத்தில் பதுக்கி வைத்ததாகவும் இவர் மீது குற்றசாட்டு எழுப்பபட்டது.
இந்த நிலையில் தற்பொழுது இவருக்கு எதிரான வழக்கு விசாரணைஒன்று நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரது பதிவியில் இருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.