யோசித மற்றும் அவருடைய பாட்டி டெய்சிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் (Daisy Forrest) ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (06) அறிவித்தது.
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் மீது, கிட்டத்தட்ட 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளதாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பல ஆவணங்களை பிரிதிவாதிகளிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
(Visited 5 times, 5 visits today)





