ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய வழக்கில் ஆஜராக ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருத்தார்.
இதன்போது ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணையை உடனடியாக முடித்து, அதில் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்தி குமார உத்தரவிட்டார்.
பின்னர் தொடர்புடைய வழக்கை ஜனவரி 28, 2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவுபிறப்பித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)




