ஐரோப்பா

பிரான்ஸில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த பரிதாப நிலை!

பிரான்ஸில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தலைநகர் பாரிசில் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள du bassin d’Austerlitz ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கு கட்டுமானப்பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஊழியர் ஒருவர் மீது கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்று மோதியுள்ளது.

பின்பக்கமாகச் சென்ற வாகனத்துக்குள் சிக்குண்டு ஊழியர் பலியாகியுள்ளார்.

உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

அத்துடன், மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

சம்பவ இடத்தில் மருத்துவ கூடாரம் அமைக்கப்பட்டு sஅக ஊழியர்களுக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

bassin d’Austerlitz தொடருந்து நிலையம் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து கட்டுமானப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!