ஐரோப்பா

பிரான்ஸில் இருவரை கொலை செய்த நபர் எடுத்த விபரீத முடிவு

பிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் தெற்கு மாவட்டமான Gard இல் உள்ள Saint-Dionisy எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை நண்பகல் வேளையில், அங்குள்ள வீடொன்றுக்குச் சென்ற 51 வயதுடைய ஒருவர், அங்கு வசித்த இருவரை சுட்டுக்கொன்றுள்ளார்.

ரைஃபிள் வகை துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அறிய முடிகிறது.

துப்பாக்கிதாரியின் முன்னாள் காதலி ( வயது 27 ) மற்றும் அப்பெண்ணின் புதிய காதலன் ( வயது 60 ) ஆகியோர்மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் அறிந்து வருகை தந்த ஜொந்தாமினர், மூன்று சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேற்படி துப்பாக்கிச்சூடு அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்