பரிதாபமாக உயிரிழந்த சிறுமி – நால்வர் கைது

உடன்படிக்கையின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயது 7 மாத பெண் குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடன்படிக்கையின் மூலம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையை வேறு தரப்பினருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை தொடர்பில் சந்தேக நபர் (இறந்த சிறுமியின் தந்தை) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஏனையவர்களில் சிறுமியை தத்தெடுக்க ஏற்றுக்கொண்ட 45 வயதுடைய பெண்ணும், அவரது 19 வயது மகள் மற்றும் 15 வயது மகனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாளிகாவத்தை லக் செவன அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசித்த மொஹமட் ரிப்கான் ஹைசா இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)