இங்கிலாந்தில் புகலிடம் பெற்ற வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) டென்மார்கை தழுவிய குடியேற்ற சீர்த்திருத்தங்களை வரும் திங்கட்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறிது.
புதிய சீர்த்திருத்தங்களுக்கு அமைய இங்கிலாந்தில் புகலிடம் பெற்ற மக்கள், தங்கள் நாடு பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டால் மீளவும் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய இங்கிலாந்து விதிகளின் கீழ், அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். பின்னர் காலவரையற்ற விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் குடியுரிமை பெறும் பாதையில் செல்லலாம்.
இதனை மாற்றும் வகையிலேயே புதிய விதிகள் கொண்டுவரப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood), ஆபத்தில் இருந்து தப்பி ஓடும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக நாங்கள் எப்போதும் இருப்போம், ஆனால் நாம் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
“ருவாண்டா திட்டத்தில் நேரமும் பணமும் ‘வீணடிக்கப்பட்டது. ஐரோப்பா முழுவதும் புகலிடக் கோரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், பிரிட்டனில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





