ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த மூவரும் இலங்கை வந்தடைந்தனர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்த மூவரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கடந்த 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இவ்வாறு இன்று (03.04) நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.
(Visited 28 times, 1 visits today)