தாய்லாந்து-கம்போடிய எல்லையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடிக்கும் பதற்றம்!

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் நடந்து வரும் சண்டை இன்று (25) இரண்டாவது நாளாக தொடர்கிறது.
நேற்று அமைதியின்மை தொடங்கியதிலிருந்து, 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 15 பேர் தாய்லாந்து நாட்டவர்கள்.
இந்த நெருக்கடி காரணமாக எல்லைக்கு அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொடர்ச்சியான அமைதியின்மை காரணமாக இரு நாடுகளின் தலைவர்களும் உடனடியாக விரோதப் போக்கை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கிடையில், நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலும் இன்று கூட உள்ளது.
(Visited 2 times, 1 visits today)