இலங்கை

திருகோணமலையில் இராணுவ முகாம் காணிக்குள் சென்று வரும் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் ஏற்பட்டுள்ள பதற்றம்

திருகோணமலை- கிண்ணியா குரங்குபாஞ்சான் இராணுவ முகாம் காணிக்குள் சென்று வரும் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பௌத்தப்பிக்கு உட்பட ஐவர் கார் ஒன்றில் நேற்று 03 ம் திகதியும் இன்றைய தினமான நான்காம் திகதியும் குரங்கு பாஞ்சான் முகாமுக்குள் வருகை தந்து செல்வதாக கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினர் எம். எம். மஹ்தி வான் எல் பொலிஸ் நிலையத்திற்கும், கிண்ணியா பிரதேச செயலாளருக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கிண்ணியா பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் வாழ்ந்து வரும் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமுக்குள் குறித்த பௌத்த மதகுரு உட்பட குழுவினர் சென்று வருவதினால் ஏதும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கைவிடப்பட்ட இராணுவம் முகாமுக்குள் பௌத்த சிலைகளை வைப்பதற்கு முயற்சிக்கின்றார்களா அல்லது புதையல் தோண்டுவதற்கு ஏதாவது உட்படுகின்றார்களா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்

கிண்ணியா பிரதேச மக்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் காலகட்டத்தில் இவர்களின் வருகை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்களும், நகர சபை உறுப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!