செய்தி

இந்தியாவில் தாமதமாக வந்த 18 மாணவிகளின் கூந்தலை வெட்டி தண்டனை வழங்கிய ஆசிரியை!

ஆந்திராவில் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு நேரங்கழித்து வந்த 18 மாணவிகளின் கூந்தலை வெட்டி தண்டனை கொடுத்துள்ளார். இந்தப் பிரச்சினை பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

ஆந்திராவின் சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்னும் பள்ளியில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆசிரியர் சாய் பிரசன்னா என்பவர், பள்ளிக்கு மாணவர்கள் நேரங்கழித்து வருவதற்கு ஒரு முடிவுகட்ட அவர்களுக்கு மறக்க முடியாத தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அவ்வகையில், கடந்த வாரம் நேரங்கழித்து வந்த மாணவ, மாணவியரைக் கணக்கெடுத்தார். அவர்கள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து மாணவிகளின் கூந்தலை வெட்டி தண்டனையை நிறைவேற்றினார்.

18 மாணவிகளின் கூந்தலை அவர் வெட்டியுள்ளார். மேலும் நான்கு மாணவர்களை அடித்து, உதைத்து நீண்ட நேரத்திற்கு வெயிலில் நிற்கும்படி கூறியிருக்கிறார். கூந்தலை இழந்த மாணவிகள் அழுது புலம்பியதும் அங்கு நடந்தது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று ஆசிரியர் அச்சுறுத்தி அனுப்பியுள்ளார்.

மணமுடைந்த மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களிடம் மோசமாக நடந்துகொண்ட ஆசிரியர் சாய் பிரசன்னாவை அந்தப் பள்ளி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி