ஆசியா செய்தி

ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி போடுவதை நிறுத்திய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான நோய்த்தடுப்பு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே தடைப் பற்றிய செய்தி ஐ.நா. அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் போலியோ எதிர்ப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து வன்முறைகளால் அழிக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதிகள் தடுப்பூசி குழுக்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், அதுப்போன்ற பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான மேற்கத்திய சதி என்று கூறப்படுகிறது.

ஆபத்தான மற்றும் முடக்குவாத நோயான போலியோ பரவுதலை தடுக்க முடியாத இரண்டு நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றொன்று பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!