ஆறு நகரங்களுக்கான சுற்று பயணத்தை ஆரம்பித்த T20 உலக கோப்பை

ICC T20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் 1ந் திகதி முதல் 29ந் திகதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையின் (Trophy) சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளது.
அமெரிக்க வீரர் அலி கான் மற்றும் ஓய்வு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளை நடத்தும் ஆறு நகரங்களில் உலா வர இருக்கிறது. அப்போது கிரிக்கெட் பிரபலங்கள் இந்த கோப்பையை ஏந்தி செல்வார்கள்.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இதுபோன்று கோப்பைகள் எடுத்துச் செல்வது வழக்கம்.
(Visited 17 times, 1 visits today)