இந்தியா செய்தி

டி20 உலக சாம்பியன்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை- நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

டி20 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் உள்ள பார்படாஸ் பகுதியை பாதித்த பெரில் புயல் காரணமாக சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி சிறப்பு விமானத்தில் நேற்று இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூறாவளி அபாயம் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டது.

மணிக்கு 130 கிமீ வேகத்தில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி இன்று (01) இந்தியா வருவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக இந்திய அணியினர் ஹோட்டலுக்குள் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!