பிபிசிக்கு சம்மன் அனுப்பிய இந்திய உயர் நீதிமன்றம்!
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கிய ஆவணப்படம் தொடர்பான அவதூறு வழக்கில், பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசிக்கு இந்தியாவின் டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட “இந்தியா, மோடிக்கான கேள்வி” என்ற ஆவணப்படம் இந்தியாவின் நற்பெயரையும், அதன் நீதித்துறை மற்றும் பிரதமரின் நற்பெயரையும் களங்கப்படுத்தியதாக அவதூறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்துள்ள குறித்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதுடெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வரி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.