இலங்கையின் சில பகுதிகளில் இன்றும் உச்சம் கொடுக்கும் சூரியன்

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இதேவேளை சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் 14 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கமைய இன்று (08) நண்பகல் 12.12 அளவில் நயினமடம், சந்தலங்காவ குண்டசாலை, மஹியங்கனை, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.