காசா மக்களுக்கு ஆதரவாக தொடரும் போராட்டம்!
இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஜோர்டானில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர். போராட்டம் தொடங்கும் முன், அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தலைநகர் அம்மான் முழுவதும் சிதறிக் கிடந்த மக்கள் ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோர்டான் மக்கள் என்றும் பாலஸ்தீனியர்களுக்காக நிற்பார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதியில் பாலஸ்தீனியர்களின் வெற்றியையே விரும்புவதாகவும் அங்கு ஒன்றுக்கூடியவர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)





