இஸ்ரேலுக்கு அமெரிக்கா விதித்த கடுமையான நிபந்தனை
இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து தொடர்ந்து ஆதரவைப் பெற காஸாவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை இஸ்ரேல் தடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் புதிய, உடனடி நடவடிக்கைகள் எடுப்பதைப் பொறுத்தே அந்நாட்டுக்கான அமெரிக்காவின் வருங்காலக் கொள்கை அமையும் என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
திங்கட்கிழமை காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 துயர்துடைப்பு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதன் பிறகு பைடன் முதன்முறையாக நெட்டன்யாஹுவுடன் (Netanyahu) தொலைபேசியில் உரையாற்றியுள்ளார்.
காஸாவுக்குப் பெருமளவு நிவாரணப் பொருள்களை அனுமதிக்கவும் உதவிப் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடுதல் பாதைகளைத் திறக்கவும் வாஷிங்டன் வலியுறுத்தியது.
பிணையாளிகளை மீட்டு வருவதற்கான உடன்பாடு குறித்து முடிவெடுக்க நெட்டன்யாஹு தமது பேராளர் குழுவுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என பைடன் கூறுகிறார்.
விரைவில் மாற்றங்களை எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இஸ்ரேலிடம் எந்த மாற்றமும் இல்லையென்றால் வாஷிங்டனின் கொள்கையில் மாற்றம் இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறினார்.