ஐரோப்பா

தரையிறங்கும் போது விமானத்தை நிலைகுலைய வைத்த புயல்… திகிலடைந்த பயணிகள்!(வீடியோ)

ஜெர்ரிட்’ புயல் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசியபோது லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது தடுமாறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டனில் கடந்த சில நாள்களாக ‘ஜெர்ரிட்’ புயல் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக லண்டனில் ‘ஜெர்ரிட்’ புயலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் பல விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “பிரிட்டனின் கடற்பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

https://twitter.com/i/status/1740058847929098420

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து லண்டன் வந்த ‘போயிங் 777’ விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ‘ஜெர்ரிட்’ புயல் காற்றின் தாக்கம் காரணமாக சிறிது நிலை தடுமாறியது.

இருப்பினும், விமான பைலட் கவனமுடன் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக ரன்வேயில் இறக்கினார். இந்த காட்சியை அங்குள்ள ‘பிக்ஜெட் டிவி’ படம் பிடித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

‘ஜெர்ரிட்’ புயல் காற்று காரணமாக விமானம் தரையிறங்கியபோது நிலைகுலைந்தது பயணிகளை ஒரு நிமிடம் திகிலடைய வைத்தது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்