கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற மாநில அரசு முடிவு!
திருவனந்தபுரம்: ‘கேரளா’ என இருக்கும் தங்கள் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று தீர்மானம் தாக்கல் செய்தார்.
அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அனைத்து அலுவலகப் பதிவேடுகளிலும் மாநிலத்தின் பெயரை “கேரளம்” என மறுபெயரிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த இந்த தீர்மானம், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எந்த மாற்றத்தையும் முன்வைக்காத நிலையில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, நேற்று கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.