கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கத்துறை

வரலாறு காணாதவகையில் இலங்கை சுங்கத்துறை அதிக வருமானத்தினை கடந்த ஆண்டு ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 970 பில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னதாக 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின் வரலாற்றில் ஈட்டபட்ட அதிக வருமானமாக பதிவாகியிருந்தது.
நிதியமைச்சு, கடந்த வருடத்துக்கான வருமான இலக்காக ஆயிரத்து 217 பில்லியன் ரூபாயை இலங்கை சுங்கத்துக்கு நிர்ணயித்திருந்தது.
எவ்வாறாயினும், இறக்குமதி கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அந்த இலக்கை 893 பில்லியன் ரூபாயாக திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)