பிரித்தானியாவில் பெண்ணின் கதறல் சத்தம் – அருகில் சென்றவர்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்
பிரித்தானியாவில் கேன்வி தீவில் பெண்ணின் கதறல் சத்தம் கேட்டு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியை சேவை ஒருவர் அவரது குடியிருப்பு வட்டாரத்தில் பெண் ஒருவர் கதறி அழுதுகொண்டிருந்ததைக் கேட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தகவலை அறிந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்குச் சென்றடைந்த பின்னரே கதறி அழுதது பெண் அல்ல என்றும் அது கிளி என்றும் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
அந்தக் கிளிக்குச் சொந்தக்காரரான ஸ்டீவ் வூட் சுமார் 21 ஆண்டுகளாகப் பறவைகளை வளர்த்து வருகின்றது. கிளி வழக்கத்திற்கு மாறாக அன்று சத்தம் போட்டுக்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஸ்டீவின் வீட்டு வாசலில் வந்து நின்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
முதலில் அவர்களைக் கண்ட ஸ்டீவ் தாம் ஏதும் தவறு செய்து விட்டோமா என்று அஞ்சினார்.
“இங்குப் பெண் ஒருவர் உதவிக்காகக் கதறி அழுதுகொண்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனை ஆராய வந்தோம். ஆனால் பயப்பட ஒன்றும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டோம்,” என அவர்கள் தெரிவித்தனர்.