செயற்கை நுண்ணறிவினால் காத்திருக்கும் சமூகத் தாக்கங்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு சிறப்பான தொழில்நுட்பமாகும். இது வேகமாக முன்னேறி வருவதால் நம்மைச்சுற்றி ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி நாம் புரிந்து கொள்வது அவசியம். இந்த பதிவில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை ஆராய்ந்து, அது எம்மாதிரியான மாற்றங்களை இவ்வுலகில் கொண்டுவரப் போகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.
Machine Learning முன்னேற்றங்கள்: AI தொழில்நுட்பம் மெஷின்லர்னிங் என்னும் கணினி நிரலாக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும். இது எதிர்காலத்தில் பல்வேறு விதமான முன்னேற்றங்களைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக அதிக அளவிலான தரவுகளை உருவாக்க முடியும் என்பதால், அதிநவீன வளர்ச்சியின் காரணமாக, மெஷின் லர்னிங் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறும். இதனால் பல மேம்பட்ட ஆட்டோமேஷன் மற்றும் இயந்திரங்கள் தானாக முடிவெடுக்கும் திறன்கள் வளர்ச்சிபெறும்.
ஆட்டோமேஷன் துறையின் வளர்ச்சி: இந்த தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் ஓட்டுனர் இன்றி இயங்கும் கார்கள், ரோபோக்கள் போன்றவை பிரபலமாகிவிடும். இந்த அமைப்புக்கு மனிதர்களின் பங்களிப்பு குறைவாகவே தேவை என்பதால், பல வேலைகள் இல்லாமலேயே போய்விடும் வாய்ப்புள்ளது. குறிப்பாக போக்குவரத்து, உற்பத்தி, சுகாதாரம் மற்றும் பல துறைகளில் இதனால் பெரும் புரட்சி ஏற்படும் என சொல்லப்படுகிறது.
உரையாடும் AI: NPL எனப்படும் நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங் என்பது AI தொழில்நுட்பத்தின் அடுத்த நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது இயந்திரங்கள் மனிதர்களின் மொழியைப் புரிந்துகொண்டு பதிலளிக்க உதவுவதாகும். உதாரணத்திற்கு விர்ச்சுவல் அசிஸ்டன்ட், ChatBot மற்றும் குரல் கட்டுப்பாட்டு சாதனங்களின் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும்.
ஹெல்த்கேரில் AI: ஹெல்த்கேர் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இப்போது தெரியத் தொடங்கியுள்ள நிலையில், இது எதிர்காலத்தில் தொடர்ந்து வளரும் என எதிர்பார்க்கலாம். ஏஐ மூலமாக இயங்கும் அமைப்புகள், மருத்துவத் தரவுகளை பகுப்பாய்வு செய்து, சிகிச்சைத் திட்டங்களை வகுப்பதற்கு உதவும். இது ஆரம்பகால நோயைக் கண்டறிவது முதல் புதிய மருந்துகளை கண்டுபிடிப்பது வரை சுகாதாரத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
மாற்றம் பெறும் வேலைமுறை: எதிர்காலத்தில் பல துறைகளில் ஏஐ பங்களிக்கும் என்பதால், வேலை முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக சில வேலைகள் ஆட்டோமேஷன் செய்யப்படும் நேரத்தில், பல புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். குறிப்பாக படைப்பாற்றல் துறையில் இதனால் பெரும் மாற்றம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
AI மற்றும் கல்வி: இதனால் கல்வித்துறையில் அறிவார்ந்த பயிற்சி அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு, பல மாற்றங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கற்பிக்க விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன், செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் கல்விக் கருவிகள் ஆகியவை கல்விப் பயணத்தை மேம்படுத்தும். மேலும் மாணவர்கள் கற்றலை மிகவும் ஈடுபாட்டுடன் அணுகக்கூடியதாக மாற்றியமைக்கும்.
இப்படி செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் பல்வேறு விஷயங்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே இதைக் குறையாகப் பார்க்காமல், எதிர்காலத்தில் மனித குலத்திற்கு பெரும் நன்மை புரியப் போகிறது என்பதை உணர்ந்து, இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இதற்கு நம்மை தயார் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.